ரத்த தான சேவைக்கு அனைத்து பொதுநல கூட்டமைப்பு விருது!
குமாரபாளையத்தில் ரத்த தான சேவைக்கு அனைத்து பொதுநல கூட்டமைப்பு சார்பில் விருது வழங்கப்பட்டது.;
ரத்த தான சேவைக்கு அனைத்து பொதுநல கூட்டமைப்பு விருது
குமாரபாளையத்தில் ரத்த தான சேவைக்கு அனைத்து பொதுநல கூட்டமைப்பு சார்பில் விருது வழங்கப்பட்டது.
விபத்தில் அடிபட்டவர்கள், மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்கள் என பலருக்கும் ரத்தம் தேவைப்படுகிறது. ரத்தம் தேவை என்றால் குமாரபாளையம் சமூக ஆர்வலர் சித்ராவிடம் சொன்னால், ரத்த தானம் செய்யும் நபர்களை தொடர்பு கொண்டு, யாருக்கு ரத்தம் தேவை என்று கேட்டறிந்து, அந்த இடத்திற்கு ஆட்களை அனுப்பி வைத்து ரத்த தானம் கொடுக்க வைத்து வருகிறார்.
இவரால் பலரும் ரத்தம் பெற்று பயன் பெற்றுள்ளனர். இவரது இந்த சேவையை பாராட்டி, குமாரபாளையம் அனைத்து பொதுநல கூட்டமைப்பு சார்பில், அதன் தலைவர் வழக்கறிஞர் தங்கவேல் விருது வழங்கி பாராட்டினார். ரத்த தான சேவைக்கு விருது பெற்ற சித்ராவை சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.