தி.மு.க. நிர்வாகி மறைவிற்கு அனைத்து கட்சியினர் மவுன ஊர்வலம், மலரஞ்சலி

குமாரபாளையம் தி.மு.க. நிர்வாகி மறைவிற்கு அனைத்து கட்சியினர் மவுன ஊர்வலம் நடத்தி மலரஞ்சலி செலுத்தினர்.;

Update: 2022-07-19 11:30 GMT

குமாரபாளையம் தி.மு.க. நகர பொறுப்புக்குழு துணை தலைவரின் திருவுருவப்படத்திற்கு நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் மலரஞ்சலி செலுத்தினார்.

குமாரபாளையம் தி.மு.க. நகர பொறுப்புக்குழு துணை தலைவரும், நகர முன்னேற்றத்திற்கு காரணமான எஸ்.எஸ்.எம். குடும்பத்தை சேர்ந்தவருமான கல்வியாளர் இளவரசன் சில நாட்களுக்கு முன்பு காலமானார். இவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அனைத்து கட்சியினர் சார்பில் மவுன ஊர்வலம் நடத்தப்பட்டது. தி.மு.க. நகர செயலாளர் செல்வம் தலைமை வகித்தார்.

பள்ளிபாளையம் பிரிவு சாலையில் தொடங்கிய மவுன ஊர்வலம் நகராட்சி அலுவலகம் முன்பு நிறைவு பெற்றது. அங்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இளவரசன் திருவுருவப்படத்திற்கு அனைவரும் மலரஞ்சலி செலுத்தினர். இதில் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன், காங்கிரஸ் நகர தலைவர் ஜானகிராமன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் பெருமாள், பா.ஜ.க., சி.பி.ஐ, சி.பி.எம்., ம.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், பொதுநல அமைப்பினர் பலரும் பங்கேற்று மலரஞ்சலி செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை விடியல் ஆரம்பம் பிரகாஷ் செய்திருந்தார்.

Tags:    

Similar News