குமாரபாளையம்: பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி அனைத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தக்கோரி, குமாரபாளையத்தில் அனைத்து தொழிற்சங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2021-06-24 14:45 GMT

அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவு சாலையில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில்,   ஆனங்கூர் பிரிவு சாலையில் ஏஐடியுசி, ஏ.ஐ.சி.சி.டி.யு. மற்றும் சி.ஐ.டி.யு. உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டு இயக்கத்தின் சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் குமாரபாளையத்தில், கடந்த 40 நாட்களாக விசைத்தறிகள் இயங்காததால் விசைத்தறி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் விசைத்தறி தொழில் சார்ந்து இருக்கக்கூடிய அனைத்து வகையான தொழில் பிரிவினரும் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

எனவே விசைத்தறிகள் இயக்க, நாமக்கல் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும்; கொரோனா கால நிவாரணமாக,  விசைத்தறி தொழிலாளர்களுக்கு குடும்பத்தினருக்கு,7,500 ரூபாய் வழங்க வேண்டும். பெட்ரோல்,டீசல் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News