பா.ஜ.க., தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்..!

குமாரபாளையத்தில் பா.ஜ.க., தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது.;

Update: 2024-03-30 10:30 GMT

குமாரபாளையத்தில் நடந்த பா.ஜ.க., தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் ஈரோடு தொகுதி வேட்பாளர் விஜயகுமார் பங்கேற்றார்.

பாராளுமன்ற தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து, அவற்றை அதிகாரிகள் பரிசீலனை செய்து வேட்புமனுக்கள் ஏற்றுக் கொண்ட நிலையில், அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்கள் சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் சின்னங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என மக்களை சந்தித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு கட்டமாக பா.ஜ.க., தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியில் ஈரோடு தொகுதி வேட்பாளராக விஜயகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். நேற்று கூட்டணி நிர்வாகிகளை சந்திக்கும் கூட்டம் நடந்தது. பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலர் சரவணராஜன் தலைமை வகித்தார்.

இதில் பா.ஜ.க. அரசின் சாதனைகளை தொகுதி முழுவதும் வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் கொடுத்து, தீவிர பிரச்சாரம் செய்வது, பூத் கமிட்டிக்கு ஆலோசனை வழங்குதல், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், சுவர் விளம்பரங்கள் எழுதி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சுவர் விளம்பரங்கள் எழுத உரிமையாளர்களிடம் அனுமதி பெறுதல், கோலப்போட்டிகள் நடத்தப்பட்டு மகளிரணி சார்பில் பிரசாரம் செய்தல், தெருமுனை பிரசார கூட்டங்கள் நடத்தி ஆதரவு திரட்டுவது, நட்சத்திர பேச்சாளர்கள் அழைத்து வந்து பிரசாரம் செய்து ஆதரவு திரட்டுதல், என்பது உள்ளிட்ட பல முடிவுகள் எடுக்கப்பட்டன.

குமாரபாளையம், பள்ளிபாளையம் நிர்வாகிகள், வேட்பாளருக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர். வேட்பாளர் விஜயகுமார் சைக்கிள் சின்னம் நிர்வாகிகளிடம் காண்பித்து, தீவிர பிரசாரம் செய்து, வெற்றி பெற ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொண்டார். குமாரபாளையம் சேர்ந்த மாவட்ட துணை செயலர் கனகராஜ், மாவட்ட செயலர் சவுமியா, சட்டமன்ற பொறுப்பாளர் நாகராஜ், நகர தலைவர் சேகர், பள்ளிபாளையம் சேர்ந்த நிர்வாகிகள் லோகநாதன், சம்பத், ஹரிஹரன், செல்வராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News