குமாரபாளையத்தில் ஏஐசிசிடியூ.,வினர் கண்டன ஆர்பாட்டம்
குமாரபாளையத்தில் ஏ.ஐ.சி.சி.டி.யூ. சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.;
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தொழிலாளர் நல சட்டம் 4 தொகுப்புகளை திருத்துவதை திரும்ப பெற வலியுறுத்தி,நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்றக்கோரி, குமாரபாளையம் தாலுக்கா அலுவலகம் முன்பு ஏ.ஐ.சி.சி.டி.யூ. சார்பில் மாவட்ட பொருளர் வெங்கடேசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட தலைவர் மாணிக்கம், மாவட்ட செயலர் சுப்பிரமணி, நிர்வாகிகள் பொன் கதிரவன், முருகன், பாலகிருஷ்ணன், மாதேஸ்வரன், பன்னீர்செல்வம், பிரபாகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.