குமாரபாளையம்: 20 சதவீத போனஸ் கேட்டு ஏஐசிசிடியூ சார்பில் ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில், 20 சதவீத போனஸ் கேட்டு ஏ.ஐ.சி.சி.டி.யூ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2021-10-20 11:00 GMT

குமாரபாளையம் தாலுகா அலுவலகம் அருகில்,  20 சதவீத போனஸ் கேட்டு,  ஏஐசிசிடியூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில்,  20 சதவீத போனஸ், 60 சதவீத கூலி உயர்வு கேட்டு,  ஏ.ஐ.சி.சி.டி .யூ. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொது செயலர் சுப்பிரமணி தலைமை வகித்தார். இது குறித்து உதவி தாசில்தார் காரல்மார்க்ஸ் வசம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

அந்த மனுவில், குமாரபாளையம், பள்ளிபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள அனைத்து வகையான விசைத்தறி தொழிலாளர்களுக்கும்,  20 சதவீத போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 6 ஆண்டுகளுக்கும் மேலாக கூலி உயர்வே வழங்காமல் இருப்பதால் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி,  கூலி உயர்வு பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

நிர்வாகிகள் சி.பி.ஐ.எம்.எல் மாவட்ட செயலர் பொன் கதிரவன், பள்ளிபாளையம் ஒன்றிய செயலாளர் முருகன், கலைவாணி, பேபி, பன்னீர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News