குமாரபாளையத்தில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அதிமுக நிர்வாகிகள் கைதை கண்டித்து குமாரபாளையத்தில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
குமாரபாளையத்தில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டாக்டர் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதை கண்டித்து திமுக அரசுக்கு எதிராக சென்னை வாலாஜா சாலையில், கழக ஒருங்கிணைப்பாளர் ஒ.பி.எஸ். தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரையும் கைது செய்தனர். இதனை கண்டித்து நகர அதிமுக சார்பில் நகர செயலர் நாகராஜன் தலைமையில் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்காதே, அதிமுக எம்எல்ஏக்கள், நிர்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும், திமுக அரசுக்கு கடும் கண்டனம் என்பது உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் நகர துணை செயலர் திருநாவுக்கரசு, சேகர், தனசேகர், பழனிவேல், தேவதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.