குமாரபாளையத்தில் அதிமுகவினர் மறியல்: 50 பேர் கைது

Today Political News in Tamil -குமாரபாளையத்தில் மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-10-20 01:05 GMT

குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் அ.தி.மு.க.வினர் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் செய்தனர்

Today Political News in Tamil -சென்னை தலைமை செயலகத்தில் நடத்த சட்டமன்ற கூட்டத்தொடரில் எதிர்கட்சி தலைவர் நியமனம் சம்பந்தமாக பேச, முன்னாள் முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டதுடன், அவை காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.

இது குறித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கேட்ட போது, போலீசார் அனுமதி மறுத்தனர்.தடையை மீறி உண்ணாவிரத போராட்டம் நடத்த சென்ற முன்னாள் முதல்வர் உள்ளிட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து குமாரபாளையம் அ.தி.மு.க. சார்பில் நகர செயலர் பாலசுப்ரமணி தலைமையில் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 50க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் அமைச்சர் ஆய்வு செய்தார்.

குமாரபாளையத்தில் கனமழை பெய்ததால் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள ஓடையில் அதிகளவில் மழை நீர் சென்று கொண்டுள்ளது. மழையின் காரணமாக பள்ளியின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதை முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆய்வு செய்தார்.

கத்தேரி ஏரியில் மழையின் காரணமாக நீர் நிரம்பியது. இதனை பார்வையிட்ட தங்கமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:

கன மழை காரணமாக அரசு ஆண்கள், பெண்கள் பள்ளியில் அதிக நீர் தேங்கியுள்ளது. கத்தேரி ஏரி நிரம்பியதால்தான் இங்கு நீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கத்தேரி ஏரி தனியாருக்கு சொந்தமானது. இங்குள்ள நீரை அகற்ற, உரிமையாளர்களிடம் அனுமதி கேட்டுள்ளோம். கலந்து பேசி முடிவு செய்து சொல்கிறேன் என்று கூறியுள்ளனர். ஏரியை சுற்றி விவசாய நிலங்களில் வெள்ளாமை வைத்து விட்டனர். அதற்கும் நஷ்ட ஈடு கொடுக்கிறோம் என கூறியுள்ளோம். அதற்காகத்தான் சங்ககிரி எம்.எல்.ஏ.வும் கூட வந்துள்ளார். எங்களது எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கீட்டில் இந்த பணியை செய்ய உள்ளோம். நீர் வெளியேறும் பகுதியில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அவை அகற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதியில் அருகே உள்ள கோம்பு பள்ளம், ஆக்கிரமிப்பால் குறுகியதாக மாறியதால், கோம்புபள்ளத்தின் நீர் அரசு ஆண்கள் பள்ளி வளாகத்தில் நுழைகிறது. இந்த தண்ணீர், கழிவுநீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட துளையின் வழியாக பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நுழைகிறது. மேலும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளி சுற்றுச்சுவர் உடைப்பாலும் கோம்பு பள்ளம் நீர் நுழைகிறது. இங்கு குளம் போல் மழைநீர் தேங்கியதால் அதனை அகற்ற ஆர்.டி.ஓ. அறிவுறித்தினார். அதன்படி நகராட்சி தூய்மை பணியாளர்கள் தேங்கிய மழைநீரை அகற்றினர்.

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மழைநீர் குளம் போல் தேங்கியது இது முதல் முறை அல்ல. 5வது முறை. இதனால் பள்ளிக்கு விடுமுறை கூட விட்டு உள்ளனர். அப்போது இந்த மழை நீர் அகற்ற வேண்டும் என்று யாருக்கும் தோணவில்லை. அது இரண்டு நாள் கழித்து தானாக வடிந்தது. மீண்டும் பெய்த மழையால் மீண்டும் மழைநீர் குளம் போல் தேங்கியது. இது குறித்து தினசரி நாளிதழ், சமூக ஊடகங்கள், என பல வழிகளில் வெளியானது.

அப்போதெல்லாம் மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட எந்த நிர்வாகத்தின் பார்வைக்கும் படவில்லையா? மாணவிகள் கழிப்பிடம் பகுதியில் சுற்றுச்சுவர் உயரம் குறைவாக உள்ளதால் சாலையில் போவோர், வருவோர் கிண்டல் செய்வதால், மாணவிகள் கழிப்பிடம் செல்லவே தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த சுவற்றின் உயரம் அதிகப்படுத்த வேண்டும் எனவும், பல வகைகளில் செய்தி வெளியானது. இந்த சுவற்றின் உயரம் அதிகப்படுத்த வேண்டும், என்று பொதுப்பணித்துறைக்கு மக்கள் நீதி மய்யம் மகளிரணியினர் கடிதம் எழுதினால், நிதி பெற்று தாருங்கள், செய்து தருகிறோம், என்று பொறுப்பற்ற முறையில் பதில் கடிதம் எழுதும் அதிகாரிகள் உள்ளவரை இதற்கு தீர்வு ஏற்படாது. அந்த அதிகாரியை மாவட்ட நிர்வாகம் எந்த வகையிலும் கண்டிக்கவில்லை. 

சங்ககிரி எம்.எல்.ஏ. சுந்தர்ராஜன், குமாரபாளையம் அ.தி.மு.க. நகர செயலர் பாலசுப்ரமணி, நகராட்சி கவுன்சிலர் பழனிச்சாமி, ஒன்றிய செயலர் குமரேசன், மாவட்ட கவுன்சிலர் செந்தில், முன்னாள் கவுன்சிலர்கள் அர்ச்சுணன், ரவி உள்பட பலர் பங்கேற்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News