அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி பாஜக.,வில் ஐக்கியம்
குமாரபாளையத்தில் அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி பா.ஜ.க.வில் இணைந்தார்.;
நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு இணை செயலராக இருந்தவரும், குமாரபாளையம் வழக்கறிஞர் சங்க தலைவருமான சரவணராஜன் மாவட்ட பா.ஜ.க. தலைவர் சத்தியமூர்த்திக்கு சால்வை அணிவித்து தன்னை பா.ஜ.க.வில் இணைத்துகொண்டார்.
மாவட்ட பொது செயலர் நாகராஜ், நிர்வாகிகள் வெங்கடேஷ், சுகுமார், ராம்குமார், லோகேந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர். நகர பா.ஜ.க. தலைவர் ராஜு உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.