குமாரபாளையத்தில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா

குமாரபாளையத்தில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2021-09-15 17:15 GMT

 குமாரபாளையம் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழாவையொட்டி, அண்ணா சிலைக்கு நகர செயலாளர் நாகராஜன் மாலை அணிவித்தார்.

குமாரபாளையம் அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் நாகராஜன் தலைமையில், மெயின் ரோடு கட்சி அலுவலகத்தில் இருந்து டூவீலரில் ஊர்வலமாக புறப்பட்டு, புதிய தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

பொதுமக்களுக்கு இனிப்புகள், முக கவசங்கள், கிரிமிநாசினி மருந்துகள் வழங்கப்பட்டன. நிர்வாகிகள் திருநாவுக்கரசு, முன்னாள் நகர செயலாளர் குமணன், பழனிச்சாமி, தனசேகர், விஸ்வநாதன், ராஜு, உள்பட பலரும் பங்கேற்றனர்.

Tags:    

Similar News