குமாரபாளையத்தில் அதிமுக உள்கட்சி தேர்தல்: கட்சியினர் விருப்ப மனு

குமாரபாளையத்தில் அதிமுக உள்கட்சி தேர்தலில் போட்டியிட கட்சி உறுப்பினர்கள் விருப்ப மனுக்கள் வழங்கினர்கள்.;

Update: 2021-12-13 11:45 GMT

 குமாரபாளையத்தில் அ.தி.மு.க. உள்கட்சி தேர்தலில் கட்சி உறுப்பினர்கள் விருப்ப மனு வழங்கினார்கள்.

அதிமுக சார்பில் உள்கட்சி தேர்தலில் விருப்ப மனு வழங்கும் நிகழ்வு மாநிலத்தில் நேற்று 35 மாவட்டங்களில் நடைபெற்றது. குமாரபாளையம் அதிமுக சார்பில் விருப்ப மனு வழங்கும் நிகழ்வு நாராணய நகர் ஜெட் பிராண்டு மண்டபத்தில் நகர செயலர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

தேர்தல் ஆணையாளர்களாக நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலர் ஜோசப், நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய மாணவரணி இணை செயலர் விஸ்வநாதன், நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலர் திருமால்வர்மா பங்கேற்று கட்சியினரிடம் விருப்ப மனுக்கள் பெற்றனர்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் இன்று முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்கவுள்ளார். நேற்று காலை முதல் நாராயண நகர் பகுதி அ.தி.மு.க.வினரால் நிரம்பி வழிந்தது. ஒவ்வொரு பகுதிக்கும் 11 வார்டுகளாக பிரிக்கப்பட்டு மூன்று இடங்களில் விருப்பமனு பெறப்பட்டது.

மாவட்ட நிர்வாகி பழனிசாமி, நகர துணை செயலர் திருநாவுக்கரசு, புருஷோத்தமன், ராஜு, விஸ்வநாதன், முருகேசன், முன்னாள் துணை சேர்மன் பாலசுப்ரமணி, முன்னாள் கவுன்சிலர்கள் அர்ச்சுனன், சேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News