அதிமுக முன்னாள் துணை சேர்மன் திமுகவில் ஐக்கியம்

குமாரபாளையத்தில் அதிமுக முன்னாள் துணை சேர்மன் திமுகவில் ஐக்கியமானார்.;

Update: 2021-08-19 16:30 GMT

குமாரபாளையம் முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் ராஜேந்திரன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர், முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

தி.மு.க.ஆட்சி அமைந்தது முதலாக பல கட்சியினர் திமுகவில் இணைந்து வருகின்றனர். பாமக மாநில பொறுப்பில் இருந்த பழனிவேல், பந்தல் பாலு, தலைமையில் ஏராளமானோர் திமுகவில் இணைந்தனர். இதன் தொடர்ச்சியாக குமாரபாளையம் முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் ராஜேந்திரன் அதிமுக-விலிருந்து விலகி, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர், முன்னாள் எம்எல்ஏ. மூர்த்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

திமுக மாநில சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினரும், நகர பொறுப்புக்குழு தலைவருமான மாணிக்கம், முன்னாள் நகர்மன்ற தலைவர்கள் ஜெகநாதன், சுயம்பிரபாமாணிக்கம், நகர கழக பொறுப்பாளர் செல்வம், மாவட்ட மகளிர்அணி அமைப்பாளர் பூங்கோதை செல்லத்துரை ஆகியோர்களுக்கு சால்வையணிவித்தார். திமுக நகர,மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் முன்னாள் நகர மன்றத் துணைத்தலைவர் ராஜேந்திரன் தம்ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்.


Tags:    

Similar News