அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் திறப்பு..!
குமாரபாளையத்தில் அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.
குமாரபாளையத்தில் அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.
லோக்சபா தேர்தல் தமிழகத்தில் ஏப். 19ல் நடைபெறவுள்ளது. அனைத்து கட்சியினர் தங்கள் தேர்தல் பணிகளை செய்து வருகிறார்கள். ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, இன்றுடன் வேட்புமனு தாக்கலும் செய்து முடித்தனர்.
தேர்தல் அலுவலகம் திறத்தல், வார்டு வாரியாக, வீடு, வீடாக துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரசாரத்தை அனைத்து அரசியல் கட்சியினர் செயல்படுத்தி வருகிறார்கள். குமாரபாளையம் தெற்கு நகரம் தி.மு.க. தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க. சார்பில் நேற்று தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. நகர செயலர் பாலசுப்ரமணி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் தங்கமணி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து வாழ்த்தி பேசினார். இவர் பேசியதாவது:
ஆற்றல் அசோக்குமார் கார்பரேட் தொழில் செய்துவருவதாக எதிர்தரப்பினர் கூறி வருகின்றனர். இவர் உழைப்பால் சம்பாரித்து, மலிவு விலையில் உணவு, இலவச மருத்துவ சேவை, பள்ளிக்கட்டிடங்கள், கோவில் புனரமைப்பு பணிகள் செய்து வருகிறார். குறைந்த நாட்கள் உள்ளதால் வேட்பாளர் பிரசாரம் ஒரு பகுதிக்கு இரு நாட்கள் எனும் வகையில் இருக்க வேண்டும். அப்போதுதான் அனைத்து பகுதிக்கும் பிரச்சாரம் செய்து முடிக்க முடியும். இதற்கு நமது பகுதி தொண்டர்கள், நிர்வாகிகள் ஒத்துழைப்பு கொடுத்து, வழக்கம் போல் அதிக ஓட்டுக்கள் பெற்றுத்தர பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் நகராட்சி தலைவர் தனசேகரன், முன்னாள் நகர செயலர் குமணன், நகர துனிஸ் செயலர் திருநாவுக்கரசு, கவுன்சிலர் பழனிச்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.