அ.தி.மு.க. பிரசாரத்தில் வேட்பாளர் பெயரை மாற்றி சொன்ன பேச்சாளர்..!

குமாரபாளையத்தில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து, நட்சத்திர பேச்சாளர்கள் மூவர் பங்கேற்றனர்.;

Update: 2024-04-11 13:00 GMT

குமாரபாளையத்தில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து, நட்சத்திர பேச்சாளர்கள் மூவர் பங்கேற்றனர்.

அ.தி.மு.க. பிரசாரம், நட்சத்திர பேச்சாளர்கள் மூவர் பங்கேற்பு, வேட்பாளர் பெயரை மாற்றி சொன்ன பேச்சாளர். தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

குமாரபாளையத்தில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து, நட்சத்திர பேச்சாளர்கள் மூவர் பங்கேற்றனர்.  ஏப். 19ல் லோக்சபா தேர்தல் நடக்கவிருப்பதையொட்டி அனைத்து அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். அ.தி.மு.க.விற்கு ஆதரவாக பிரேமலதா, தி.மு.க.விற்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின், பா.ஜ.க. கூட்டணி தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாசன் ஆகியோர் குமாரபாளையம் வந்து பிரசாரம் செய்தனர். நேற்றுமுன்தினம் அ.தி.மு.க. வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரை ஆதரித்து திரைப்பட இயக்குனர் உதயகுமார், நடிகர்கள் அனுமோகன், ரங்கநாதன் ஆகியோர் பிரசாரம் செய்தனர்.

அனுமோகன் பேசியதாவது:

நான் எப்பவும் அதிகாலை 05:00 மணிக்கு எழுவது வழக்கம். வழக்கமாக அந்நேரத்தில் கோழி கூவும், பறவையினங்கள் சப்தமிடும். ஆனால், இரண்டே முக்கால் ஆண்டு காலமாக விடியாத அரசு இங்கு இருப்பதால், எந்த கோழியும் கூவுவது இல்லை, பறவையினங்கள் சத்தம் போடுவதும் இல்லை. அதனால் தாமதமாக எழுந்து வருகிறேன்.

ஐந்தறிவு கொண்ட ஜீவன்களுக்கு கூட தெரிகிறது. நாம் உஷாராக இருக்க வேண்டும் அல்லவா? அனகோண்டா பாம்பு தமிழகத்தை சாப்பிட குடும்பத்துடன் அலைகிறது. அதை அடித்து விரட்ட வேண்டும். 1977ல் தேர்தல் பிரசாரத்திற்காக இந்திராகாந்தி மதுரை வந்தார். மேலமாட வீதியில் திறந்த வெளி வாகனத்தில் பிரசாரம் செய்ய வந்த போது, தி.மு.க.வினர், கைகளில் வைத்திருந்த மிளகாய்ப்பொடியை முதலில் வாகன ஓட்டுனருக்கு கண்களில் போட்டனர்.

அதன் பின் பெரிய இரும்பு கம்பிகளால் கண்ணாடியை உடைத்து, இந்திராகாந்தியை கொல்ல முயற்சித்தனர். அந்த வாகன ஓட்டுனர் வேகமாக மதுரை விமான நிலையம் கொண்டு வந்து இந்திரா காந்தியை பத்திரமாக மீட்டார். அப்போது கைகளில் இருந்த மாலைகளை எல்லாம் ஓட்டுனர் கழுத்தில் போட்டு, என் வாழ்வை காப்பாற்றிய மகன் நீ, என்று பாராட்டினார்.

அவர்தான் என் அப்பா. அந்த கட்சியுடன் மீண்டும் கூட்டணி போடும் இவர்களா மக்களை காக்க போகிறார்கள். இருவரும் குடும்ப அரசியல் செய்பவர்கள். தி.மு.க.வினர் ஊழல் பேர்வழிகள். மக்களை காக்க மாட்டார்கள். ஆற்றல் உதயகுமாருக்கு ஓட்டு போடுங்கள் . (அருகில் இருந்தவர்கள் ஆற்றல் அசோக்குமார் என வேட்பாளர் பெயரை கூறினர்) சொல்லாற்றல், செயலாற்றல் இருந்தால்தான் ஒருவன் சாதிக்க முடியும். அவர்தான் ஆற்றல் அசோக்குமார். அவருக்கு உங்கள் அதரவு கொடுங்கள். நாற்பதும் நாங்கள்தான். வெற்றிவிழாவிற்கு வருவோம். இவ்வாறு அவர் பேசினார்.

இயக்குனர் உதயகுமார், நடிகர் ரங்கநாதன் இருவரும் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு தர கேட்டு பிரசாரம் செய்தனர்.

Tags:    

Similar News