குமாரபாளையத்தில் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு
குமாரபாளையத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.;
குமாரபாளையத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி வழிகாட்டுதல்படி, அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டது.
ஆனங்கூர் பிரிவு சாலையில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை நடைபெற்ற மவுன ஊர்வலத்திற்கு முன்னாள் அமைச்சர் தங்கமணியின் புதல்வர் தரணிதரன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு துணை செயலர் புருஷோத்தமன் தலைமை வகித்தனர்.
பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
நகர செயலர் நாகராஜன் அன்னதானத்தை துவக்கி வைத்தார். நகர துணை செயலர் திருநாவுக்கரசு, முன்னாள் நகர செயலர் குமணன், பழனிச்சாமி, சேகர் ஜூவல்லர்ஸ் தனசேகரன், ராஜா, விஸ்வநாதன், சேகர், தொழில் நுட்ப பிரிவு நகர தலைவர் சிங்காரவேல், மகேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்