குமாரபாளையத்தில் அதிமுக வேட்பாளருக்கு எம்ஜிஆர் வேடமிட்டு வாக்கு சேகரிப்பு
குமாரபாளையத்தில் எம்.ஜி.ஆர். வேடமணிந்த நபருடன் மேளதாளங்கள் முழங்க அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம் செய்தார்.;
குமாரபாளையத்தில் எம்.ஜி.ஆர். வேடமணிந்த நபருடன் மேளதாளங்கள் முழங்க அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம் செய்தார்.
குமாரபாளையம் நகராட்சி நகர்மன்ற தேர்தல் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் வேட்பாளர்கள் தங்கள் பகுதியில் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குமாரபாளையம் 11வது வார்டில் சுந்தரமூர்த்தி அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் முன்னாள் கவுன்சிலர் ரவி மற்றும் தனது ஆதரவாளர்களுடன் எம்.ஜி.ஆர்.வேடமணிந்த நபருடன் ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்தார். மேளதாளங்களுடன், எம்.ஜி.ஆரை கண்ட பொதுமக்கள் திரண்டு வந்து வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர்.