குமாரபாளையத்தில் வேளாண்மை துறை சார்பில் வயல்வெளி தின விழா

குமாரபாளையம் அருகே வேளாண்மை துறை சார்பில் வயல்வெளி தின விழா நடைபெற்றது.;

Update: 2022-03-19 12:30 GMT

குமாரபாளையம் அருகே உப்புபாளையம் பகுதியில், வேளாண்மை துறை சார்பில் வயல்வெளி தின விழா நடைபெற்றது. 

குமாரபாளையம் அருகே உப்புபாளையம் பகுதியில் வேளாண்மை துறை சார்பில்,  வயல்வெளி தின விழா நடைபெற்றது. உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் நாச்சிமுத்து தலைமை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குனர் கலைச்செல்வி, ஈரோடு ஆகாஷ் நிறுவன துணை தலைவர் முரளிதரன், வேளாண்மை கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் தேவராஜன், உதவி அலுவலர்கள் காமேஷ், பாலாஜி, தொழில் நுட்ப மேலாளர் பிரியங்கா மற்றும் பி.ஜி.பி. வேளாண் இறுதியாண்டு மாணவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதில் அட்மா திட்ட உலா மாவட்ட, வெளி மாவட்ட பயிற்சிகள், கண்டுணர் சுற்றுலா, அட்மா திட்ட செயல்பாடுகள், மத்திய, மாநில அரசு திட்டங்கள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தில் வழங்கப்படவுள்ள வேளாண் இயந்திரங்கள் மற்றும் இடுபொருட்கள், உயிர் உரங்கள், ஒற்றை நாற்று முறை, நீர் வளங்கள், மண் வள அட்டை, ஆடர விதை அட்டை, சான்று விதை அட்டை, உளுந்து சாகுபடி செய்தல், உள்ளிட்ட கருத்துகள் எடுத்துரைக்கபட்டன. 

Tags:    

Similar News