விரிவாக்க அலுவலர்கள் விவசாயிகளுடன் வேளாண் விஞ்ஞானிகள் கலந்துரையாடல்
வேளாண் விஞ்ஞானிகள், விரிவாக்க அலுவலர்கள் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி பாப்பம்பாளையம் பகுதியில் நடந்தது.;
வேளாண் விஞ்ஞானிகள், விரிவாக்க அலுவலர்கள் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி பாப்பம்பாளையம் பகுதியில் நடந்தது.
வேளாண் விஞ்ஞானிகள், விரிவாக்க அலுவலர்கள் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி பாப்பம்பாளையம் பகுதியில் வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயமணி தலைமையில் நடந்தது.
இதில் சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் ஜெகதாம்பாள் பேசியதாவது:
கரும்பில் சத்துக் குறைபாடு போக்க, கரும்பு நுண்ணூட்ட சத்து ஒரு ஏக்கருக்கு 20 கிலோ, என்ற அளவில் இரண்டு தவணைகளில் இட வேண்டும், கரும்பு பூஸ்டரை 45, 60,75 ஆவது நாட்களில் இலை வழியில் தெளிக்க வேண்டும். கரும்பில் பூச்சி நோய் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகள் பூச்சி நோய் தாக்குதல் இல்லாத வயல்களில் விதைக்கரனை தேர்வு செய்ய வேண்டும், கரும்பு கரணியை விதை நேர்த்தி செய்து நட வேண்டும், தோகை உரித்து வயல்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் துணை வேளாண்மை அலுவலர் மாயஜோதி, உதவி வேளாண்மை அலுவலர்கள் சின்னத்துரை, செல்வி, விஸ்வபிரியா வட்டார தொழில்நுட்ப மேலாளர் கிருபா உள்பட பலர் பங்கேற்றனர்.