நடு கல் விவகாரம் ஆர்.டி.ஓ. பேச்சுவார்த்தைக்கு பின் இழுபறி
குமாரபாளையம் அருகே நடுகல் விவகாரத்தில் ஆர்.டி.ஓ.பேச்சுவார்த்தைக்கு பின் இழுபறி நிலை நீடித்து வருகிறது.;
நடு கல் விவகாரம்
ஆர்.டி.ஓ. பேச்சுவார்த்தைக்கு பின் இழுபறி
குமாரபாளையம் அருகே நடுகல் விவகாரத்தில் ஆர்.டி.ஓ.பேச்சுவார்த்தைக்கு பின் இழுபறி நிலை நீடித்து வருகிறது.
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம், வேளாங்காடு பகுதியில் ஒரு சமுதாயத்தினர், அவர்களது குடும்பங்களை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட இறந்தவர்கள் நினைவாக, மற்றொரு சமுதாய நபர் ஒருவரின் பட்டா நிலத்தில் நினைவுக்கல் வைத்து வழிபட்டு வந்தனர். இதற்கு நில உரிமையாளர் மற்றும் அவரது சமுதாயத்தினர், கல் வைத்த நபர்களிடம் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். நாட்டு வைத்த நினைவு கற்களை அகற்றுமாறு போலீசில் புகார் கொடுத்து, அந்த பிரச்னை தீராத நிலையில், மீண்டும் அதே இடத்தில் நினைவுக்கல் வைத்து வழிபடுகிறோம் என்று கூறி, 75க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். இதற்கு நில உரிமையாளர் உள்ளிட்ட, நில உரிமையாளரின் சமுதாய மக்கள் பலரும் திரண்டதால், மோதல் சூழல் ஏற்பட்டது. இது சம்பந்தமாக திருச்செங்கோடு ஆர்.டி.ஒ. அலுவலகத்தில், ஆர்.டி.ஓ. சுகந்தி தலைமையில் சில நாட்கள் முன்பு நடந்த நான்காம் கட்ட பேச்சுவார்த்தையில் சுமுக தேர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் கூறினர். ஆனால் இடம் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் வசம் ஒரு தரப்பினர் தங்கள் ஆட்சேபனையை தெரிவித்துள்ளனர். இது குறித்து விவசாயி விஸ்வநாதன் கூறியதாவது:
கடத்த இரு நாட்களாக இடத்தை ஆய்வு செய்ய வருவாய்த்துறையினர் மேற்படி இடத்திற்கு சென்றனர். ஆனால், பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்ட படி நடந்து கொள்ளாமல், மேலும் அதிக நிலம் ஒதுக்கி தருமாறு ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் பணியினை முடிக்க முடியாமல் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேச்சுவார்த்தையில் டி.எஸ்.பி. கிருஷ்ணன், தாசில்தார் சிவகுமார், இன்ஸ்பெக்டர் தவமணி, ஆர்.ஐ. புவனேஸ்வரி, உள்பட பலர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
படவிளக்கம் :குமாரபாளையம் அருகே இடத்தை ஆய்வு செய்ய வந்த வருவாய்த்துறையினர்.