ஆடிப்பூரத்தையொட்டி குமாரபாளையம் கோவிலில் அம்மனுக்கு வளையல் அலங்காரம்
Aadi 18 Perukku - குமாரபாளையம் கோவில்களில் ஆடிப்பூரத்தையொட்டி அம்மனுக்கு வளையல் அலங்காரம் நடைபெற்றது.;
ஆடிப்பூரம் நாளையொட்டி குமாரபாளையம் சேலம் சாலை சவுண்டம்மன் கோவிலில் அம்மன் வளையல் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்
Aadi 18 Perukku - ஆடிப்பூரம் நாளையொட்டி குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது. இதே போல் அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், சவுண்டம்மன் கோவில்கள், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், பள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பன்னாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2