குமாரபாளையத்தில் அ.தி.மு.க தேர்தல் பணிமனை திறப்பு விழா
குமாரபாளையத்தில் அ.தி.மு.க தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது.;
குமாரபாளையம் நகரமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றதையொட்டி, அந்தந்த பகுதி வேட்பாளர்கள் தங்கள் பகுதிகளில் தேர்தல் பணிமனைகளை துவக்கி வருகிறார்கள். நடராஜா நகரில் அ.தி.மு.க. தேர்தல் பணிமனை திறப்பு விழாவானது, நகர செயலாளரும், வேட்பாளருமான நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய குமாரபாளையம் எம்.எல்.ஏ.வுமான தங்கமணியின் மகன் தரணி பங்கேற்று பணிமனையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதில் தரணி பேசியதாவது: குமாரபாளையம் தொகுதி அ.தி.மு.க. கோட்டை என்பதை நீங்கள் பலமுறை நிருபித்திருக்கிறீர்கள். இந்த முறை அ.தி.மு.க. சார்பில் நகர மன்றத் தலைவர் வருவது உறுதி. அனைத்து வார்டுகளிலும் அ.தி.மு.க. தொண்டர்கள் அயராது பாடுபட்டு, தொகுதியில் வெற்றியை பெற்று தந்தது போல், நகராட்சி நகரமன்ற தலைவர் பதவியையும் பெற்று தர பாடுபட வேண்டும் என்றார். வேட்பாளர் புருஷோத்தமன், நிர்வாகிகள் நகர துணை செயலர் திருநாவுக்கரசு, முன்னாள் நகர செயலாளர் குமணன் உள்பட பலர் பங்கேற்றனர்.