முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அ.தி.மு.க.வினர்
குமாரபாளையம் அ.தி.மு.க.வினர் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு அவரது பிறந்த நாளையொட்டி வாழ்த்து கூறினார்கள்.
முன்னாள் அமைச்சரும், தற்போதைய குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான தங்கமணி பிறந்த நாள் விழா எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடைபெற்றது. நகர செயலாளர் பாலசுப்ரமணி, துணை செயலர் திருநாவுக்கரசு, கவுன்சிலர் புருஷோத்தமன், முன்னாள் கவுன்சிலர்கள் சிங்காரவேல், ரவி, அர்ச்சுணன், நிர்வாகிகள் தனபால், உள்ளிட்ட பலரும் பங்கேற்று மாலைகள், சால்வைகள் அணிவித்து வாழ்த்து கூறினார்கள். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.