குமாரபாளையத்தில் அ.ம.மு.க.விற்கு தாவிய அதிமுகவினர்
குமாரபாளையத்தில், அதிமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர், டிடிவி தினகரனின்அ.ம.மு.க.வில் இணைந்தனர்.;
குமாரபாளையத்தில், மாற்று கட்சியினர் பலர்,அ.ம.மு.க.வில் இணைந்தனர்.
குமாரபாளையம் பகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில், அதிமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் பலர் இணைந்து வருகின்றனர். அவ்வகையில், 31வது வார்டு அ.தி.மு.க. நிர்வாகி சக்திவேல், 4வது வார்டு சி.பி.ஐ.கட்சி நிர்வாகி அர்த்தனாரி, சண்முகம் உள்ளிட்ட பலர், குமாரபாளையம் அ.ம.மு.க. நகர செயலர் அங்கப்பன் தலைமையில், அக்கட்சியில் இணைந்தனர்.
இவர்களுக்கு, அமமுக பொதுக்குழு உறுப்பினர் லோகநாதன், படைவீடு பேரூர் செயலர் செல்வகுமார், நிர்வாகிகள் சீனிவாசன், ரமேஷ், வெங்கடேசன், அபுபக்கர், மாணிக்கராஜ், தேவராஜன், சந்தோஷ்குமார் உள்பட பலர் வாழ்த்தி வரவேற்றனர்.