அதிமுக உள்கட்சித் தேர்தல்: தேர்வானவர்களுக்கு பதவி சான்றிதழ் வழங்கல்

குமாரபாளையம் பகுதி அதிமுக உள்கட்சித் தேர்தலில், தேர்வானவர்களுக்கு பதவி உத்தரவு சான்றிதழ்களை, முன்னாள் அமைச்சர் தங்கமணி வழங்கினார்.

Update: 2021-12-14 06:45 GMT

அதிமுக உட்கட்சி தேர்தலில் தேர்வானவர்களுக்கு, முன்னாள் அமைச்சர் தங்கமணி சான்றிதழ் வழங்கினார். 

குமாரபாளையத்தில் அ.தி.மு.க உள்கட்சி  தேர்தலில்,   பதவி பெற்றவர்களுக்கான உத்தரவு சான்றிதழ்களை,   முன்னாள் அமைச்சர்கள் வழங்கினர். அ.தி.மு.க. சார்பில் உள்கட்சி தேர்தலில் விருப்பமனு வழங்கும் நிகழ்வு,  மாநிலத்தில் நேற்று 35 மாவட்டங்களில் நடைபெற்றது. குமாரபாளையம் அ.தி.மு.க. சார்பில் உள்கட்சி விருப்ப மனு வழங்கும் நிகழ்வு,  நாராணய நகர் ஜெட் பிராண்டு மண்டபத்தில், நகர செயலர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. 

இதில் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இது குறித்து, நகரச் செயலாளர் நாகராஜன் கூறுகையில்,  குமாரபாளையம் நகரில் உள்ள 33 வார்டுகளுக்கும் தலைவர், செயலர், துணை செயலர், இணை செயலர், பிரதிநிதி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 12 பேர் தேர்வு செய்யப்படும் என்றார். 

தேர்தல் ஆணையாளர்களாக,  நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலர் ஜோசப், நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய மாணவரணி இணை செயலர் விஸ்வநாதன், நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலர் திருமால்வர்மா பங்கேற்று,  கட்சியினரிடம் விருப்ப மனுக்கள் பெற்றனர்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில்,  நேற்று மாலை 05:00மணி வரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் அடிப்படையில் போட்டி இல்லாத நபர்கள் மற்றும் பரிசீலனைக்கு பின் உறுதி செய்யப்பட்ட நபர்களுக்கு, முன்னாள் அமைச்சர்கள் அன்பழகன் மற்றும் தங்கமணி பங்கேற்று பதவி உத்தரவு சான்றிதழ்களை   வழங்கி வாழ்த்தினர். இன்றும் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. மாவட்ட நிர்வாகி பழனிசாமி, நகர துணை செயலர் திருநாவுக்கரசு, புருஷோத்தமன்,  ராஜு, விஸ்வநாதன், முருகேசன், முன்னாள் துணை சேர்மன் பாலசுப்ரமணி, முன்னாள் கவுன்சிலர்கள் அர்ச்சுனன், சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News