பள்ளிபாளையம் நகர்மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

பள்ளிபாளையத்தில் நடந்த நகர்மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.;

Update: 2024-08-30 15:30 GMT

பள்ளிபாளையத்தில் நடந்த நகர்மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

பள்ளிபாளையத்தில் நடந்த நகர்மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

பள்ளிபாளையம் நகர மன்ற கூட்டம் நகராட்சி தலைவர் செல்வராஜ் தலைமையில்  இன்று நடைபெற்றது. இதில் தங்களுடைய வார்டு பகுதிகளில் நகர மன்ற தலைவரின் தனிப்பட்ட தலையீடுகள் அதிகமாக இருப்பதாகவும், மேலும் வார்டு கவுன்சிலர்கள் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை இருப்பதால், இதனை கண்டித்து அ.தி.மு.க கவுன்சிலர்கள் நகர மன்ற கூட்ட அரங்கிலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து நகராட்சி ஆணையாளர் தாமரை, வார்டு கவுன்சிலர்களை சந்தித்து வார்டு பகுதியில் நிலவும் பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து, போராட்டத்தை கைவிட கோரி வேண்டுகோள் விடுத்தார். இதையேற்று இரு நாட்களுக்குள் வார்டு பகுதிகளில் நிலவும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டுமென நகராட்சி கமிஷனிடம் கோரிக்கை மனுவை வழங்கி, அ.தி.மு.க. கவுன்சிலர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.


Tags:    

Similar News