பேனர்களை அகற்ற அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு

குமாரபாளையத்தில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களை அகற்ற அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்;

Update: 2022-04-26 13:15 GMT

குமாரபாளையம் நகராட்சியில் அதிமுக சார்பில் வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டன.

குமாரபாளையம் நகரில் சேலம் சாலை, இடைப்பாடி சாலை, பள்ளிபாளையம் சாலை, ஆனங்கூர் சாலை உள்ளிட்ட பல இடங்களில் கடைதிறப்பு விழா, கல்வி நிறுவனங்கள் விளம்பரம், கோவில் கும்பாபிஷேக விழா, ஜவுளிக்கடை, நகைக்கடை உள்ளிட்ட அதிக பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

அதே போல முன்னாள் அமைச்சர் தங்கமணி மாவட்ட செயலராக தேர்வு செய்யப்பட்டத்திற்கும், குமாரபாளையம் அ.தி.மு.க. நகர செயலராக பாலசுப்ரமணி தேர்வு செய்யப்பட்டமைக்கும், அனைத்து வார்டுகளில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

மாவட்ட கலெக்டர் உத்திரவின்படி, நகராட்சி கமிஷனர் வழிகாட்டுதல்படி, நகராட்சி நகரமைப்பு அலுவலர் இயற்கை பிரியன் தலைமையில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் பேனர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அ.தி.மு.க. பேனர்களை அகற்ற நகர செயலர் பாலசுப்ரமணி மற்றும் நிர்வாகிகள்,  நகராட்சி அலுவலர் மற்றும் காவல்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஒரு கட்டத்தில் தாங்களாகவே அகற்றிக் கொள்கிறோம் என அ.தி.மு.க.வினர் கூறியதால், சமரசம் ஏற்பட்டது. 

Tags:    

Similar News