ஆடி வெள்ளிக்கிழமையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு..!

குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2024-08-02 13:00 GMT

 குமாரபாளையம் நேதாஜி நகரில் சந்தோசி அம்மன் கோவிலில் அம்மன் மகாலட்சுமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடந்தது. 

குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

ஆடி வெள்ளிக்கிழமை நாளையொட்டி குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது. இதே போல் கோட்டைமேடு காளியம்மன் கோவில், சேலம் சாலை, ராஜா வீதி சவுண்டம்மன் கோவில்கள், அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், வாசுகி நகர் சக்தி மாரியம்மன் கோவில், நேதாஜி நகர் சந்தோசி அம்மன் கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், தட்டான்குட்டை ஜெய்ஹிந்த் நகர் புருஷோத்தம பெருமாள் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

ஆடி மாதத்தின் சிறப்புகள் :

ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மனை வழிபாடு செய்தால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது காலம் காலமாக இருந்துவரும் நம்பிக்கையாகும். ஆடி வெள்ளி வழிபாடு செய்வதால் திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு திருமணம் கைகூடும், குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆடி வெள்ளி அன்று அம்மனை முழுமனதோடு வேண்டுதல் வேண்டும். அவள் வரங்களை அள்ளித்தருவாள்என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை.

ஆடி ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைகளையும் நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் நாளாக கருதப்படுகிறது.

ஜோதிட சாஸ்திரத்தில் ஆடி மாதத்தை ‘கர்கடக மாதம்’ என்பார்கள். சூரியன் குருவின் நட்சத்திரமான புனர்பூசம் நான்காம் பாதத்தில் நுழையும் நேரத்தில் கடக ராசியில் சூரியன் செல்வதே ஆடி மாத துவக்கம். தமிழ் மாத பிறப்புகளுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது.

அந்தந்த கால, பருவ சூழ்நிலைக்கு ஏற்ப திருவிழாக்களையும், உற்சவங்களையும், விரத வழிபாடுகளையும் ஏற்படுத்தி வைத்துள்ளனர். தமிழ் மாதத்தில் நான்காவது மாதமான ஆடி, தட்சிணாயன புண்ய காலமாகும். இது தேவர்களின் இரவு நேரம் என்று புராணங்கள் சொல்கின்றன.

Tags:    

Similar News