ஆடி பெருக்கையொட்டி குமாரபாளையம் காவிரியில் வழிபாடு நடத்திய பெண்கள்
ஆடி பெருக்கையொட்டி குமாரபாளையம் அருகே காவிரியில் பெண்கள் வழிபாடு நடத்தினர்.;
ஆடிப்பெருக்கு விழா இன்று எல்லா இடங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நீர் நிலைகளில் பூஜைகள் நடத்தி வழிபாடு செய்யப்பட்டது. குமாரபாளையம் அருகே காவிரி ஆற்றில் உலக சமாதான ஆலயம் சார்பில் காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாகவும், உலக நன்மை வேண்டியும் பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.