தனுஷ் பிறந்தநாள்: அன்னதானம், இலவச நோட்டுகள், அரிசி வழங்கிய ரசிகர்கள்
நடிகர் தனுஷ் பிறந்தநாளையொட்டி குமாரபாளையம் தனுஷ் ரசிகர்கள் அன்னதானம், இலவச நோட்டுகள் ஆகியவற்றை வழங்கினர்.;
நடிகர் தனுஷ் பிறந்தநாள்விழாவையொட்டி, அன்னதானம் வழங்கிய சிறப்பு அழைப்பாளர் வழக்கறிஞர் சரவணராஜன்
நடிகர் தனுஷ் பிறந்தநாள்விழா மாநிலம் முழுதும் பல்வேறு வகைகளில் கொண்டாடி வருகின்றனர். இதில் ஒரு கட்டமாக குமாரபாளையம் தனுஷ் தலைமை ரசிகர் மன்றம் சார்பில் முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடத்தப்பட்டது.
மேற்கு மாவட்ட ரசிகர் மன்ற தலைவர் பாபு தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பா.ஜ.க. அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவரும், வழக்கறிஞருமான சரவணராஜன் பங்கேற்று பொதுமக்களுக்கு இனிப்புகள், அன்னதானம், ஏழை மாணவ, மாணவியர்களுக்கு நோட்டு புத்தகங்கள், ஆதரவற்றோர் மையத்திற்கு அரிசி மூட்டை ஆகியன வழங்கினார்.
நகர தலைவர் முருகேசன், செயலர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.