அரசு பள்ளி மாணவ, மாணவியர் இன்டர்நேஷனல் கராத்தே போட்டியில் சாதனை
குமாரபாளையம் அரசு பள்ளி மாணவ, மாணவியர் இன்டர்நேஷனல் கராத்தே போட்டியில் சாதனை படைத்தனர்.;
தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடந்த இன்டர்நேஷனல் கராத்தே போட்டியில் குமாரபாளையம் அரசு பள்ளி மாணவ, மாணவியர் சாதனை படைத்தனர்.
அரசு பள்ளி மாணவ, மாணவியர் இன்டர்நேஷனல் கராத்தே போட்டியில் சாதனை
குமாரபாளையம் அரசு பள்ளி மாணவ, மாணவியர் இன்டர்நேஷனல் கராத்தே போட்டியில் சாதனை படைத்தனர்.
தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் இன்டர்நேஷனல் கராத்தே போட்டி நடந்தது. இதில் இரண்டாயிரத்திற்கும் மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். அதில் குமாரபாளையம் நாராயண நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 5,6,7ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியர், 10 வயது முதல் 15 வயது வரையிலான வயது பிரிவின் கீழ் போட்டிகளில் பங்கேற்றனர். இதில் ஸ்ரீநிஷா மற்றும் நித்தீஸ் இருவரும் இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்தனர். சாய்நித்தீஸ், ஹரிஹரசுதன், மித்ரா, தவனீஷ், விகாஸ் ஆகியோர் மூன்றாமிடம் பெற்று சாதனை படைத்தனர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் ஜீனு கிருஷ்ணன் மூன்றாமிடம் பெற்றார்.
தலைமை ஆசிரியர்கள் ஆடலரசு, பாரதி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், தற்காப்பு கலை பயிற்சி ஆசிரியர் பன்னீர்செல்வம் உள்பட பலரும் சாதனை படைத்த மாணவ, மாணவியரை பாராட்டினர்.