வாகனங்களை நிறுத்தி கல்லால் தாக்குவதாக மிரட்டிய 6 நபர்கள் கைது

குமாரபாளையத்தில் வாகனங்களை நிறுத்தி கல்லால் தாக்குவதாக மிரட்டிய 6 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2025-03-31 15:20 GMT

வாகனங்களை நிறுத்தி கல்லால் தாக்குவதாக மிரட்டிய 6 நபர்கள் கைது


குமாரபாளையத்தில் வாகனங்களை நிறுத்தி கல்லால் தாக்குவதாக மிரட்டிய 6 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

குமாரபாளையம் இடைப்பாடி சாலை அரசு மருத்துவமனை எதிரில், உழவர் சந்தை எதிரில், காவேரி நகர் பாலம் பிரிவு பகுதியில் ஆகிய இடங்களில் தலா இரண்டு நபர்கள் நநின்று கொண்டு அவ்வழியாக செல்லும் வாகனங்களை நிறுத்தி, நாங்கள் தான் இந்த ஊரில் ரவடிகள் என்றும், கல்லை காட்டி, வாகனத்தின் கண்ணாடியை உடைத்து விடுவேன் என்றும், மிரட்டி வந்தனர். இது குறித்து குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைக்க நேரில் வந்த போலீசார், அரசு மருத்துவமனை எதிரில், தங்கமணி, 55, கோபிநாத், 30, ஆகியோரை கைது செய்தனர். உழவர் சந்தை எதிரில், மணிகண்டன், 32, இளங்கோ, 34, ஆகியோரை கைது செய்தனர். காவேரி நகர் பாலம் பிரிவு பகுதியில் ஸ்ரீநாத், 23, ஆனந்தராஜ், 33, ஆகிய இருவரை கைது செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Similar News