குமாரபாளையத்தில் விபத்து ஏற்படுத்திய வாகனம் கண்டுபிடிப்பு
குமாரபாளையத்தில், விபத்தில் இளைஞர் உயிரிழக்க காரணமான வாகனத்தை, போலீசார் கண்டுபிடித்தனர்.;
குமாரபாளையம், காலனி மருத்துவமனை பஸ் நிறுத்தம் அருகே, கோழி இறைச்சிக்கடையில் வேலை பார்த்து வந்தவர் ஸ்ரீகாந்த், 25. இவரது சொந்த ஊர் ஓசூர் என்று கூறப்படுகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான், இந்த கடையில் பணியில் சேர்ந்துள்ளார்.
இரு நாட்கள் முன்பு, வட்டமலை தனியார் கல்லூரி எதிரில், சேலம்- கோவை புறவழிச் சாலையை ஸ்ரீகாந்த் நடந்தபடி கடந்துள்ளார். அப்போது, சேலம் மார்க்கத்தில் இருந்து வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், படுகாயமடைந்து, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து, குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து, மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை செய்து வந்தனர். இதில், வாகனத்தை இயக்கியது, சேலம் கோவை புறவழிச்சாலை, சிவசக்தி நகரை சேர்ந்த தினேஷ், 35, என்பது தெரியவந்தது. இதே விபத்தில் காயமடைந்து, ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.