சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஒளிரும் விளக்கால் விபத்து ஏற்படும் அபாயம்
குமாரபாளையத்தில் சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஒளிரும் விளக்கால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் அதனை அகற்ற கோரிக்கை விடப்பட்டுள்ளது;
குமாரபாளையம் பள்ளிபாளையம் சாலை காலனி மருத்துவமனை பேருந்து நிறுத்தம் பகுதியில் ஒளிரும் விளக்கால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
குமாரபாளையம் பள்ளிபாளையம் சாலை காலனி மருத்துவமனை பேருந்து நிறுத்தம் பகுதியில் தனியார் மருத்துவமனை உள்ளது. இதன் முன்புற பகுதியில் ஒளிரும் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஒளிரும் விளக்கு அந்தப் பகுதியாக செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளின் கண்களை கூசும் விதமாக உள்ளது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் உள்ளது. இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.
அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக இந்த ஒளிரும் விளக்கை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.