குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி பலி
குமாரபாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி பலியானார்.;
குமாரபாளையம் அம்மன் நகரில் வசிப்பவர் முருகேஷ், 55, கூலி தொழிலாளி. நேற்றுமுன்தினம் இரவு 10:00 மணியளவில் ஐயப்பன் கோவில் அருகே, சேலம் - கோவை புறவழிச்சாலையை கடந்து கழிப்பிடம் சென்றார்.
அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி, தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே முருகேஷ் உயிரிழந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.