அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதியதில் இரு மூதாட்டிகள் பலி
குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதியதில் இரு மூதாட்டிகள் பலியானார்கள்.
அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதியதில் இரு மூதாட்டிகள் பலி
குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதியதில் இரு மூதாட்டிகள் பலியானார்கள்.
குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலை பல்லக்காபாளையம் பகுதி கொல்லப்பட்டி பிரிவு அருகே, டிச. 11 அதிகாலை 06:00 மணியளவில் நடந்து கடந்த, சுமார் 65 வயதுள்ள மூதாட்டி மீது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்தில் பலியானார். இது குறித்து வி.ஏ.ஓ. கோவித்தராஜ் புகார் செய்துள்ளார். இதே போல் டிச. 10ல் இரவு 09:00 மணியளவில் தேசிய நெடுஞ்சாலை, டீச்சர்ஸ் காலனி அருகே நடந்து கடந்த, சுமார் 65 வயதுள்ள மூதாட்டி மீது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்தில் பலியானார். இது குறித்து வி.ஏ.ஓ. அரசு குமாரபாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்ததில் இறந்த இரு மூதாட்டிகளும் யார் என்பது தெரியவில்லை. இருவரது உடல்களும் குமாரபாளையம் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.