நிலை தடுமாறி டூவீலரிலிருந்து விழுந்து கூலித் தொழிலாளி பலி
குமாரபாளையத்தில் நிலை தடுமாறி டூவீலரிலிருந்து விழுந்து கூலித் தொழிலாளி பலியானார்.;
நிலை தடுமாறி டூவீலரிலிருந்து
விழுந்து கூலித் தொழிலாளி பலி
குமாரபாளையத்தில் நிலை தடுமாறி டூவீலரிலிருந்து விழுந்து கூலித் தொழிலாளி பலியானார்.
குமாரபாளையம் அருகே புள்ளாக்கவுண்டம்பட்டி பகுதியில் வசிப்பவர் பூபதி, 47. கூலித் தொழிலாளி. இவர் மார்ச் 19ல் காலை 08:45 மணியளவில், இடைப்பாடி சாலை, தனியார் மில் பெட்ரோல் பங்க் அருகே வேகமாக, தனது டி.வி.எஸ். ஸ்டார் சிட்டி வாகனத்தில் சென்ற போது, நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த இவர், மேல் சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவர் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் பகல் 11:-00 மணியளவில் இறந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.