ஆஜர் ஆகாத மூன்று குற்றவாளிகள் தேடப்படும் குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவிப்பு

குமாரபாளையம் குற்ற வழக்கு சம்பந்தமாக ஆஜர் ஆகாத மூன்று குற்றவாளிகள் தேடப்படும் குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.;

Update: 2025-05-11 07:22 GMT

ஆஜர் ஆகாத மூன்று குற்றவாளிகள் தேடப்படும் குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவிப்பு

குமாரபாளையம் குற்ற வழக்கு சம்பந்தமாக ஆஜர் ஆகாத மூன்று குற்றவாளிகள் தேடப்படும் குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இது குறித்து இன்ஸ்பெக்டர் தவமணி கூறியதாவது:

குமாரபாளையம் குற்ற வழக்கு சம்பந்தமாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுக்கா, நடுப்பட்டி கிராமம் குண்டன் (எ) ராமகிருஷ்ணன், 25, மாயன் (எ) மாரியப்பன், 23, நாயக்கன்புதூர் கிராமம், வெங்கடேசன், 27, ஆகிய மூன்று எதிரிகளையும், நாமக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம், 2, திருச்செங்கோட்டில், மேற்படி எதிரிகள் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் உள்ளனர். மேற்படி எதிரிகளை நீதிமன்றத்தால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு, மூன்று பேரும், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம், 2ல், ஜூன், 23, தேதிக்குள் ஆஜர் ஆக வேண்டும், என நீதிமன்றத்தால் உத்திரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News