ஆடு, மாடு மேய்த்ததிற்காக பெண்ணுக்கு கொலை மிரட்டல்

குமாரபாளையத்தில் விவசாய நிலத்தில் ஆடு, மாடு மேய்த்ததிற்காக, கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீது பெண் புகார் கொடுத்துள்ளார்.;

Update: 2025-04-27 12:14 GMT

ஆடு, மாடு மேய்த்ததிற்காக

பெண்ணுக்கு கொலை மிரட்டல்

குமாரபாளையத்தில் விவசாய நிலத்தில் ஆடு, மாடு மேய்த்ததிற்காக, கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீது பெண் புகார் கொடுத்துள்ளார்.

குமாரபாளையம் பல்லக்காபாளையம் அருகே குட்டக்காடு பகுதியில் வசிப்பவர் புஷ்பா, 45. ஏப். 23, காலை 07:00 மணியளவில், நிலம் சம்பந்தமாக பிரச்சனை ஏற்பட்டு, முன்விரோதம் இருந்த நிலையில், புஷ்பா, அவரது விவசாய நிலத்தில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அதே பகுதியைச் சேர்ந்த ராஜூ, 55, தர்நீஷ், 23, ஆகியோர் அங்கு வந்து, இது எங்கள் நிலம். இங்கு ஆடு, மாடு மேய்க்கக் கூடாது என்று தகாத வார்த்தையால் திட்டியதுடன், ஒரு வாரத்தில் கொலை செய்து விடுவோம் எனவும் மிரட்டியதாக தெரிகிறது. இது குறித்து புஷ்பா, குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். இதன்படி குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இருவரும் தலைமறைவானதாக கூறப்படுகிறது.

Similar News