குமாரபாளையம் காவிரி ஆற்றில் ஆடி 18 திருவிழா கொண்டாடிய பொதுமக்கள்
குமாரபாளையம் அருகே பவானி கூடுதுறையில் புனித நீராடி ஆடி 18 திருவிழாவை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.;
குமாரபாளையம் காவிரி ஆற்றில் ஆடி 18 திருவிழாவை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
ஆடிப்பெருக்கு எனும் ஆடி 18 திருவிழாவில் பொதுமக்கள் ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளில் நேரடி இறைவனை வணங்குவது வழக்கம். குமாரபாளையம் அருகே பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் புனித நீராடவும், கோவிலில் சுவாமியை தரிசனம் செய்யவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. இதனால் காவிரி படித்துறைகளில் பொதுமக்கள் இறைவனுக்கு தேங்காய், வாழைப்பழம், இதர பழ வகைகள், பொட்டுக்கடலை, நாட்டு சர்க்கரை,பச்சரிசி, ஆகியவற்றை படையலிட்டு, கற்பூர தீபாராதனை காட்டி வணங்கினர். தாய்மார்கள் தங்கள் தாலிக்கயிறு மாற்றிக்கொண்டனர். புதுமண தம்பதியர் பங்கேற்று வணங்கினர். இதனால் காவிரியில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டி போலீசார் அறிவுறுத்தினர்.