ஆடி பிறப்பு: பள்ளிபாளையத்தில் தேங்காய், அழிஞ்சி குச்சி விற்பனை ஜோர்

நாளை ஆடி மாதம் பிறக்கும் நிலையில், தேங்காய் சுடும் அழிஞ்சி குச்சிகள் விற்பனை சூடுபிடித்துள்ளது.

Update: 2021-07-16 03:30 GMT

பள்ளிபாளையம் பேருந்து நிறுத்த பகுதியில், தேங்காய் சுடும்  குச்சிகளை விற்பனைக்கு வைத்துள்ள வியாபாரி.

தமிழ் மாதமான ஆடி, நாளை பிறக்கிறது. பக்தியிலும், நம் பாரம்பரியத்திலும் முக்கிய இடம் பிடித்த ஆடி மாதத்தில், முதல் நாளன்று, தேங்காய் சுடும் நிகழ்வு, முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதிகளில், தேங்காய் சுடுவதற்கு பயன்படுத்தப்படும் அழிஞ்சி குச்சி விற்பனை களை கட்டியுள்ளது. குறிப்பாக, பேருந்து நிறுத்தப்பகுதியில் தேங்காய் சுடும் அழிஞ்சி குச்சிகள் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த குச்சி ஒன்று, 15 ரூபாய் முதல், 20 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

அதேநேரம், தேங்காய் விற்பனை அதிகரித்துள்ளது.  இதனால் அதன் விலை வழக்கமான நாட்களை விட இன்று கூடுதல் விலையுடன் விற்கப்பட்டு வருகிறது. கொரோனா தாக்கம், மக்களிடையே பணப்புழக்கம், இல்லாமை போன்ற காரணங்களால் விற்பனை எந்த அளவிற்கு இருக்கும் என்பது, இன்று மாலைக்கு பிறகே தெரியவரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News