குமாரபாளையத்தில் 2 வாரங்களாக பூட்டிக்கிடக்கும் ஆதார் சேவை மையம்
குமாரபாளையம் ஆதார் சேவை மையம் இரண்டு வாரங்களாக பூட்டி வைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் ஏமாற்றமடைகின்றனர்.
குமாரபாளையம் ஆதார் சேவை மையம் இரண்டு வாரமாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
ஜூன் 6ல் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், மாணவ, மாணவியர் பலரும் ஆதார் சம்பந்தமான பணிகள் செய்ய குமாரபாளையம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள ஆதார் சேவை மையம் வந்தால் தினமும் பூட்டி உள்ளது என, திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது பற்றி பொதுமக்கள் கூறியதாவது:
ஆதார் பணிகள் செய்ய வந்தால் இரண்டு வார அளவில், குமாரபாளையம் நகராட்சி அலுவலக வளாக ஆதார் சேவை மையம் பூட்டி வைக்கபட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவ, மாணவியர், பொதுமக்கள் பலரும், ஆதார் சம்பந்தப்பட்ட பணிகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இங்குள்ள பணியாளர் பள்ளிபாளையம் ஆதார் சேவை மையம் சென்றதாகவும் கூறப்படுகிறது. பள்ளி துவங்க இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில் இது போல், ஆதார் பணிகள் செய்ய முடியாத நிலை ஏற்படுவதால் பலரும் அதிருப்தியில் உள்ளனர். இந்த ஆதார் அலுவலகம் செயல்பட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.