குமாரபாளையம்:வாய்க்காலில் விழுந்த மரம் சரியாக அகற்றப்படாததால் அதிருப்தி

குமாரபாளையம் அருகே வாய்க்காலில் விழுந்த மரம் அகற்றப்படாதது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-05-11 15:30 GMT
குமாரபாளையம் அருகே வாய்க்காலில் விழுந்த மரம் சரியாக அகற்றப்படாமல் உள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பலத்த காற்றினால் வாய்க்காலில் உடைந்து விழுந்த மரத்தை அரைகுறையாக அகற்றிய பொதுப்பணித்துறையினரின் செயல் அப்பகுதி பொதுமக்களை அதிருப்தியடைய வைத்துள்ளது.

குமாரபாளையம் தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம், பூச்சக்காடு பகுதியில் பலத்த காற்று வீசியதால், மேட்டூர் கிழக்கு கரை வாய்க்கால் கரையோரமாக இருந்த பெரிய மரம் ஒன்று உடைந்து வாய்க்காலில் விழுந்தது. இதனால் இப்பகுதி மக்கள் நடந்து செல்ல சிரமம் ஏற்பட்டதால், உடைந்து விழுந்த மரத்தை பொதுப்பணித்துறையினர் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். பல நாட்கள் கழித்து வந்த பொதுப்பணித்துறை பணியாளர்கள் அரைகுறையாக வெட்டியதுடன், வாய்க்காலில் விழுந்த கிளைகளை கூட அகற்றாமல் சென்றது அப்பகுதி பொதுமக்களை அதிருப்தியடைய வைத்துள்ளது.

Tags:    

Similar News