குமாரபாளையத்தை சேர்ந்த மாணவர், மாவட்ட அளவிலான மல்யுத்த போட்டியில் முதலிடம்!

குமாரபாளையத்தை சேர்ந்த மாணவர், மாவட்ட அளவிலான மல்யுத்த போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை செய்துள்ளார்.;

Update: 2024-11-10 11:30 GMT

குமாரபாளையத்தை சேர்ந்த மாணவர், மாவட்ட அளவிலான மல்யுத்த போட்டியில் முதலிடம்

குமாரபாளையத்தை சேர்ந்த மாணவர், மாவட்ட அளவிலான மல்யுத்த போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை செய்துள்ளார்.

குமாரபாளையம், சின்னப்பநாயக்கன்பாளையத்தில் வசித்து வருபவர் துகில்,13. .கடலூரில் உள்ள அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். மேட்டூரில் நடைபெற்ற இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் நடத்திய மல்யுத்த போட்டியில் 14 வயது பிரிவில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து மாநில அளவில் தேர்வாகி நவ. 15ல் டெல்லியில் நடைபெறும் மல்யுத்த போட்டியில் பங்கேற்க உள்ளார். இவர் இந்த போட்டியில் வெற்றி பெற விடியல் பிரகாஷ், மேற்கு காலனி நகராட்சி பி.டி.ஏ. தலைவர் ரவி, உள்ளிட்ட பலர் பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசு மற்றும் புத்தகங்கள் வழங்கி பாராட்டினர்.

Tags:    

Similar News