குமாரபாளையத்தில் பல நாட்களை கடந்து இரவு, பகலாக எரியும் சோடியம் மின்விளக்கு
குமாரபாளையத்தில் பல நாட்களாக சோடியம் மின்விளக்கு இரவு, பகலாக எரிந்து வருகிறது.;
குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் கிழக்கு வீதியில் ரெயின்போ பிளக்ஸ் அலுவலகம் முன்பு உள்ள தெரு மின் கம்பத்தில் பல நாட்களாக சோடியம் மின்விளக்கு இரவு, பகலாக எரிந்து வருகிறது.
குமாரபாளையத்தில் பல நாட்களாக சோடியம் மின்விளக்கு இரவு, பகலாக எரிந்து வருகிறது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் கிழக்கு வீதியில் ரெயின்போ பிளக்ஸ் அலுவலகம் முன்பு உள்ள தெரு மின் கம்பத்தில் பல நாட்களாக சோடியம் மின்விளக்கு இரவு, பகலாக எரிந்து வருகிறது. இது பற்றி மின்வாரிய ஊழியர்களிடம் சொல்லியும் எவ்வித நடவடிக்கை இல்லை என தெரிவித்தனர்.
மின்சார சிக்கனம், தேவை இக்கணம், என்றெல்லாம் பிரச்சாரம் செய்து வரும் மின்வாரிய பணியாளர்கள் இது போல் மின்சாரத்தை வீணடிப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியயை ஏற்படுத்தியுள்ளது.