இளங்கோவன் மறைவுக்கு மவுன ஊர்வலம், மலரஞ்சலி

குமாரபாளையத்தில் இளங்கோவன் மறைவுக்கு மவுன ஊர்வலம், மலரஞ்சலி நடந்தது.

Update: 2024-12-15 12:00 GMT

இளங்கோவன் மறைவுக்கு மவுன ஊர்வலம், மலரஞ்சலி

குமாரபாளையத்தில் இளங்கோவன் மறைவுக்கு மவுன ஊர்வலம், மலரஞ்சலி நடந்தது.

முன்னாள் மத்திய அமைச்சர், காங்கிரஸ் மூத்த தலைவர், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான இளங்கோவன் உடல்நலமில்லாமல் இறந்தார். இவரது மறைவிற்கு குமாரபாளையம் அனைத்து கட்சியினர் சார்பில் மவுன ஊர்வலம் மற்றும் மலரஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. ஆனங்கூர் பிரிவு பகுதியிலிருந்து தொடங்கிய மவுன ஊர்வலத்திற்கு நகர காங்கிரஸ் தலைவர் ஜானகிராமன் தலைமை வகித்தார். நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள காந்தி சிலை அருகே ஊர்வலம் நிறைவு பெற்று, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இளங்கோவன் சேவைகள் குறித்து அனைவரும் நினைவு கூர்ந்து பேசினார்கள். நகராட்சி தலைவரும், நகர வடக்கு பொறுப்பாளர் விஜய்கண்ணன், தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகரன்,மக்கள் நீதி மய்யம் மாவட்ட அமைப்பாளர் சித்ரா,  தி.க. சரவணன், மற்றும் சி.பி.ஐ., சி.பி.எம்., உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


Tags:    

Similar News