டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் தனியார் நிறுவன பணியாளர் உயிரிழப்பு

குமாரபாளையத்தில் டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் தனியார் நிறுவன பணியாளர் உயிரிழந்தார்.;

Update: 2023-04-23 11:30 GMT

குமாரபாளையத்தில் டூவீலர் மீது கார் மோதிய விபத்தில்  தனியார் நிறுவன பணியாளர் பலியானார்.

குமாரபாளையம் வட்டமலை, காந்தி நகரில் வசித்தவர் ரவிக்குமார் (வயது 36.). தனியார் நிறுவன பணியாளர். இவர் நேற்று காலை 09:25 மணியளவில், எதிர்மேடு, தனியார் கல்லூரி முன்பு, பேஷன் புரோ டூவீலரில் சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது  கோவையிலிருந்து வந்த நிசான் கிக்ஸ் கார் மோதியதில் பலத்த காயமடைந்தார். இவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர். இவரை பரிசோதித்த டாக்டர் வழியில் இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

ஈரோடு மாவட்டம், சித்தார் பகுதியில் வசிப்பவர் சதீஸ்குமார்( 28.) இவர் நேற்றுமுன்தினம் அதிகாலை 01:40 மணியளவில் ஹீரோ ஹோண்டா டூவீலரில் தன் நண்பனை பார்க்க வேண்டி, குமாரபாளையம், சின்னப்பநாயக்கன்பாளையம், மணி போட்டோ ஸ்டூடியோ அருகே வந்த போது, எதிரில் வேகமாக வந்த மற்றொரு டூவீலர் இவர் வந்த வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் சதீஷ்குமார் பலத்த காயமடைந்தார். இவரை பெருந்துறை அரசு மருத்துவமனையில்  சேர்த்துள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். 

Tags:    

Similar News