வாய்க்கால் நீரில் விழுந்து இறந்த நபர்
குமாரபாளையம் அருகே வாய்க்கால் நீரில் விழுந்து ஆண் ஒருவர் இறந்தார்.
வாய்க்கால் நீரில் விழுந்து இறந்த நபர் - குமாரபாளையம் அருகே வாய்க்கால் நீரில் விழுந்து ஆண் ஒருவர் இறந்தார்.
குமாரபாளையம் அருகே வெப்படை சாலை, கல்லங்காட்டுவலசு பஸ் நிறுத்தம் அருகே உள்ள வாய்க்காலில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் மாலை 05:00 மணியளவில் இறந்து கிடந்தார். இதும் குறித்து தகவலறிந்த குமாரபாளையம் போலீசார் சடலத்தை மீட்டு, விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இவர் வேமன்காட்டுவலசு பகுதியில் வசிக்கும் வெற்றி, 50, என்பது தெரியவந்தது. இது குறித்து இவரது உறவினர் சீதாராமன், 38 புகார் கொடுத்ததின் பேரில், குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.