குமாரபாளையம் கல் குவாரியில் விதி மீறி செயல்பட்ட ஒருவர் கைது

குமாரபாளையம் அருகே கல் குவாரியில் தாசில்தார் ஆய்வு செய்தபோது விதி மீறி செயல்பட்டவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-21 15:15 GMT

குமாரபாளையம் தாசில்தார் தமிழரசிக்கு விதி மீறி டிராக்டரில் கற்கள் திருடப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று பல்லக்காபாளையம் பகுதியில் உள்ள ஒரு கல் குவாரியில் தாசில்தார் ஆய்வு செய்தார். அப்போது அங்கு விதி மீறி கற்களை ஏற்றும் பணி தொடங்கியது கண்டு, டிராக்டர் மற்றும் டிராக்டர் ஓட்டுனர் சங்ககிரியை சேர்ந்த பெரியசாமி (வயது61) என்பவரையும் குமாரபாளையம் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் பெரியசாமியை கைது செய்தனர்.

Tags:    

Similar News