போலி லாட்டரி விற்ற ஒருவர் கைது

குமாரபாளையத்தில் போலி லாட்டரி விற்ற ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-12-01 10:30 GMT

போலி லாட்டரி விற்ற ஒருவர் கைது

குமாரபாளையத்தில் போலி லாட்டரி விற்ற ஒருவர் கைது செய்யப்பட்டார்.

குமாரபாளையத்தில் போலி லாட்டரி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. தங்கவடிவேல், ஆகியோர் தீவிர ரோந்து பனி மேற்கொண்டனர். எம்.ஜி.ஆர். நகர் பஸ் நிறுத்தம் அருகே போலி லாட்டரி விற்பது உறுதியானது. நேரில் சென்ற போலீசார் பவானியை சேர்ந்த வீரபத்திரன், 53, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து, வெள்ளை தாளில் எண்கள் எழுதப்பட்ட மூன்று சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News