நண்பரின் மனைவியுடன் இருசக்கரவாகனத்தில் சென்றவர் சாலை விபத்தில் உயிரிழப்பு

குமாரபாளையம் அருகே நண்பரின் மனைவியுடன் இருசக்கரவாகனத்தில் சென்றவர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.;

Update: 2023-06-11 16:04 GMT

குமாரபாளையம் அருகே டூவீலரில் நண்பர் மனைவியுடன் சென்றவர்  கார் மோதிய விபத்தில் பலியானார். படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சேலம் மாவட்டம் சங்ககிரி ஈஸ்வரன் கோயில் பின்புறம் வசித்து வந்தவர் பூபதி (வயது 59.) இவர் பவானி லட்சுமி நகர் பகுதியில் கார்களுக்கு வீல் அலைன்மென்ட் வேலை செய்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு 09:30 மணியளவில் வேலை முடிந்து, தனது டி .வி.எஸ். ஸ்கூட்டி வாகனத்தில் பச்சாம்பாளையம் அருகே வரும்போது, அப்பகுதி சரவணபவன் ஹோட்டலில் பணியாற்றும் தன் நண்பரின் மனைவி பூங்கொடி,( 58,) என்பவர் வேலை முடிந்து நின்று கொண்டிருந்தார்.

இரவு நேரம் என்பதால் தன்னை  வீட்டில் கொண்டு போய் விட்டு விடுமாறு பூபதியிடம் கேட்டார். பூபதியும் நண்பரின் மனைவி என்பதால்  தனது வாகனத்தில் அவரை அமர வைத்துகொண்டு சென்றார். சாமான்டூர் பிரிவு பகுதியில் சாலையில், வாகனத்தை திருப்பும் போது, சேலம் பக்கமிருந்து வேகமாக வந்த இன்னோவா கார், இவர்கள் வந்த டூவீலர் மீது மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இருவரையும் சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு  பூபதியை பரிசோதித்த மருத்துவவர்கள் வரும்  வழியிலேயே அவர்  இறந்து விட்டார் என கூறினார்கள்.

பூங்கொடிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், கோவை கங்கா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வெப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தது யார் என்பது தொடர்பான விபரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News